கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (11-20)
விவேக்பாரதி புகுந்த நாள்முதலாய்க் - கண்ணம்மா புரியாப் பலநிகழ்வு! புகழை வெறுத்துவிட்டேன் - மஞ்சமும் புதரெனக் குத்துதடி (11) நிறோஷ் ஞானச்செல்வம் குத்தும் முட்களெலாம் - கண்ணம்மா குவிமலர் ஆயினவோ பித்துப் பிடித்ததுவோ - காட்சியிற் பிழைகள் தோன்றுதடி! (12) விவேக்பாரதி தோன்றும் சுடர்களிலும் - கண்ணம்மா தோகை உனதுமுகம் ஊன்றிக் கிடக்குதடி - பிம்பங்கள் உள்ளம் நிறைக்குதடி (13) நிறோஷ் ஞானச்செல்வம் நிறைந்த கதிரமுதே - கண்ணம்மா நினைவி லெழுங்கலையே உறைந்த அக்கினியே - உள்ளூர ஒளிரும் தண்புனலே! (14) விவேக்பாரதி புனலுங் குளிர்கொடுக்கக் - கதிரவன் புதுமை இதங்கொடுக்க மனத்தில் நினைத்திருந்தேன் - கண்ணம்மா மழையின் வடிவில்வ...