Posts

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

  விவேக்பாரதி இனிக்கும் மதுக்குடமே - கண்ணம்மா           இன்பத் திரவியமே! மனிதப் பிறவியிலே - நான்பெறும்           மாண்புகள் உன்னருளே! (51)   நிறோஷ் ஞானச்செல்வம் அருளொடு பொருளெல்லாம் - கண்ணம்மா           அடைந்தனன் என்றிருந்தேன் இருளெனும் மாயையடி - நீயல்லால்           எல்லாமும் என்றனுக்கே! (52)   வெ.விஜய் கேட்டதைக் கூறடியோ - கண்ணம்மா           கேள்வியும் ஏனடியோ பாட்டொன்று பாடடியோ - என்னைப்           பத்திரம் போடடியோ (53) விவேக்பாரதி பாடல் பலமிழக்கும் - கண்ணம்மா           பார்வைச் சுரத்தின்முன்னே!  ஆடல் பொலிவிழக்கும் - ரம்பையரை           ஆளுங் குலத்துப்பெண்ணே! (54) நிறோஷ் ஞானச்செல்வம் ஏகாந்தம் இனிக்குதடி - கண்ணம்மா           எண்ணச் சுழலுயிர்ப்பில் மீகாமன் ஆகிவிட்டேன் - உன்னையே       ...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)

Image
  வெ.விஜய் சொல்லிய வார்த்தையிலே - கண்ணம்மா           சோகந் தெரியுதடி மெல்ல நடைபயின்றே - என்றன்           மேனி தழுவிடடி (41)   விவேக்பாரதி தழுவிடுந் தென்றல்தரும்  - சில்லெனும்             தண்ணிலை உன்னினைவே மழுவெனக் கண்ணுடையாய் - கண்ணம்மா           மதகரி முன் தோன்றினே ன் (42)   நிறோஷ் ஞானச்செல்வம் ஏனென்ற கேள்வியில்லை - கண்ணம்மா           என்றன் அருகிருக்க நானென்ற எண்ணமில்லை - நீயென்றன்           ஞாலப் பெருந்துணையே! (43)   வெ.விஜய் பெருமை என்றுணர்ந்தே - உன்னைப்           பெற்று வளர்த்தவளை அருமை என்றுசொன்னேன் - கண்ணம்மா           அருகில் நிற்கையிலே (44)   விவேக்பாரதி நிற்பது நீயானால் - கண்ணம்மா           நிலவுக்குக் காய்ச்சல்வரும் சொற்பதம் நீயானால் - என்கவிச்       ...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

Image
  விவேக்பாரதி வேண்டாத நேரமில்லை - கண்ணம்மா            விரும்பாத நாட்களில்லை  ஆண்டாள் உனைத்தொடவே - கிள்ளையாய்            ஆருடல் திரித்திடுவேன் (31)   நிறோஷ் ஞானச்செல்வம் திரித்த நூல்நுனியில் - செஞ்சுடர்           திரளும் மணிவிளக்கே சிரித்த மலர்முகமே - கண்ணம்மா           சிந்தை மிகுத்தவளே! (32)   விவேக்பாரதி மிகுதிப் பொருள்கொடுத்தும் - வானத்தில்            மின்னல் இடிப்பதில்லை  தகுதிக் குறும்வினையாம் - கண்ணம்மா            தகுந்தநின் பார்வையைப்போல் (33)   நிறோஷ் ஞானச்செல்வம் போர்க்கலை யறிந்தனவோ - நீகொண்ட           பொல்லாப் புருவவிற்கள் பார்க்கையில் நாணேற்றும் - கண்ணம்மா           பாதகம் செய்யாதேடி! (34) வெ.விஜய் தேடும் பார்வையிலே - கண்ணம்மா           தீயும் நிறையுதடி ஓடும்...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (21-30)

Image
நிறோஷ் ஞானச்செல்வம் கிடப்பில் பலசேதி - கண்ணம்மா           கேட்பது யாரோடி நடக்கப் போகையிலே - ஒவ்வொன்றாய்           நாமவை பேசிடலாம் (21)   வெ.விஜய் பேசும் பறவைகளைக் - கண்ணம்மா           பேணி வளர்ப்பதுபோல் வீசும் தென்றலுக்கும் - கண்ணம்மா            வெட்கத்தைக் கூறடியோ (22) விவேக்பாரதி அடிகள் அதிகம்பட்டு - நெஞ்சந்தான்            அழுது கதறுகையில்  பிடியாய்த் துணைக்குவந்தாய் - கண்ணம்மா            பிழைத்தேன் உனதருளால் (23)   நிறோஷ் ஞானச்செல்வம் ஆலப் பெருமரமாய்க் - கண்ணம்மா           அன்பு நிலைத்திருக்கும் கோலச் சித்திரமே - எண்ணத்திற்           கொஞ்சும் தமிழழகே! (24)     வெ.விஜய் அழகுக் கேற்றவொரு - கண்ணம்மா           அன்பு இருக்குதடி  நிழலும் பின்தொடரக் - கண்ணம்மா    ...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (11-20)

Image
விவேக்பாரதி புகுந்த நாள்முதலாய்க் - கண்ணம்மா           புரியாப் பலநிகழ்வு! புகழை வெறுத்துவிட்டேன் - மஞ்சமும்           புதரெனக் குத்துதடி (11) நிறோஷ் ஞானச்செல்வம் குத்தும் முட்களெலாம் - கண்ணம்மா           குவிமலர் ஆயினவோ பித்துப் பிடித்ததுவோ - காட்சியிற்           பிழைகள் தோன்றுதடி! (12) விவேக்பாரதி தோன்றும் சுடர்களிலும் - கண்ணம்மா           தோகை உனதுமுகம் ஊன்றிக் கிடக்குதடி - பிம்பங்கள்           உள்ளம் நிறைக்குதடி (13) நிறோஷ் ஞானச்செல்வம் நிறைந்த கதிரமுதே - கண்ணம்மா           நினைவி லெழுங்கலையே உறைந்த அக்கினியே - உள்ளூர           ஒளிரும் தண்புனலே! (14) விவேக்பாரதி புனலுங் குளிர்கொடுக்கக் - கதிரவன்           புதுமை இதங்கொடுக்க மனத்தில் நினைத்திருந்தேன் - கண்ணம்மா           மழையின் வடிவில்வ...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (1-10)

Image
நிறோஷ் ஞானச்செல்வம்:  கொல்லயில் தானோடி கண்ணம்மா - நீ           கோபச் செந்நிறமோ ஒல்லைக் கெதிர்ப்பதமோ கண்ணம்மா - நீ           ஓதக்கடல் நுரையோ!                                                         *** விவேக்பாரதி:  வில்லின் விசையடிநீ - கண்ணம்மா           வீசும் விழிச்சுடரில்!  ஒல்லைக் கெதிர்ப்பதந்தான் - காதலின்           ஒற்றை மொழிசொலவோ? (1)  நிறோஷ் ஞானச்செல்வம்:  சொல்லும் மொழிகளிலே - கண்ணம்மா           சொக்க வைத்திடுவாய் எல்லை எங்குளதோ - உன்னுடைய           இன்பப் பூஞ்சிரிப்பில் (2)  விவேக்பாரதி:   சிரிப்பில் புதியவளே - கண்ணம்மா           சிக்கிமுக்கி இதழே உரசல் நெருப்பு...