கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)
விவேக்பாரதி வேண்டாத நேரமில்லை - கண்ணம்மா விரும்பாத நாட்களில்லை ஆண்டாள் உனைத்தொடவே - கிள்ளையாய் ஆருடல் திரித்திடுவேன் (31) நிறோஷ் ஞானச்செல்வம் திரித்த நூல்நுனியில் - செஞ்சுடர் திரளும் மணிவிளக்கே சிரித்த மலர்முகமே - கண்ணம்மா சிந்தை மிகுத்தவளே! (32) விவேக்பாரதி மிகுதிப் பொருள்கொடுத்தும் - வானத்தில் மின்னல் இடிப்பதில்லை தகுதிக் குறும்வினையாம் - கண்ணம்மா தகுந்தநின் பார்வையைப்போல் (33) நிறோஷ் ஞானச்செல்வம் போர்க்கலை யறிந்தனவோ - நீகொண்ட பொல்லாப் புருவவிற்கள் பார்க்கையில் நாணேற்றும் - கண்ணம்மா பாதகம் செய்யாதேடி! (34) வெ.விஜய் தேடும் பார்வையிலே - கண்ணம்மா தீயும் நிறையுதடி ஓடும்...